Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வருக்கு அஇ இந்து மகா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீஜி வேண்டுகோள்.

0

*அகில இந்திய இந்து மகாசபா சார்பாக*

*தமிழக முதல்வருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:*

தமிழகத்தில் கொரனா எதிரொளி காரணமாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு வரவேற்கதக்க ஒன்று.

இருப்பினும் இதில் சில மாற்றங்களை கொண்டு வந்தால் மக்களுக்கு கூடுதல் நலம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருதி சில கருத்துக்களை
அகில இந்திய இந்து மகாசபா சார்பாக தெரிவிக்கின்றோம்..

*தேனீர் கடைகளை திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்*

அதற்கான காரணங்கள்:

1)பாலில் ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கிறது.‌

2)தேயிலையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கிறது.

அதிகப்படியான மக்கள் சோர்வு நிலையில் இருந்து புத்துணர்ச்சி பெற தேனீர் கடைகளில் தேனீர் அருந்துவது வழக்கமாக கொண்டிருந்தனர்.

தேனீர் கடைகள் மூடி வைக்கப்
பட்டுள்ளதால் அவர்களுக்கு பாலின் மூலம் கிடைத்து வந்திருந்த ஆக்ஸிஜன் அளவும் தேனீர் மூலம் கிடைத்து வந்திருந்த எதிர்ப்பு சக்தி அளவும் குறைய வாய்ப்புள்ளது.

எனவே தேனீர் கடைகளை திறக்க வழிவகை செய்ய வேண்டும்.

*வாகன ஓட்டிகளுக்கு சில கட்டுப்பாட்டுகள்* :

1) இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

2)ஆட்டோவில்
ஒருவரும்

3)காரில் இருவரும்
ஓட்டுநருடன் சேர்த்து 3நபர்கள் பயணிக்க உத்தரவு பிறக்க வேண்டும்.

*மளிகை கடைகளுக்கு கட்டுப்பாடுகள்*

1) தற்போது காலை 6 மணிமுதல் 10 வரை மளிகை கடைகள் இயங்கி வருகிறது.

குறைந்தளவு நேரமே இயங்குவதால் ஒரே நேரத்தில் எண்ணற்ற மக்கள் சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காமல் கூடுவதால் கொரனா தொற்று மேலும் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.

2)ஒரு பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. குறைந்தது ஆயிரம் மளிகை கடைகளாவது அந்த பகுதியில் இயங்கிவரும்.

3) ஒரு பகுதியில் இயங்கிவரும் காவல்நிலையத்தில் 50 பணியாளர்கள் மட்டும் இருப்பதால் அத்தனை பேரும் அந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பு தருவது சாத்தியமில்லாத ஒன்று.

4) மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மளிகை கடைகள்
காலை முதல் மாலை வரை

சமூக இடைவெளியுடன் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.

5)சமூக இடைவெளியை பின்பற்றி இயங்காத மளிகை கடைகளை நிரந்தரமாக மூடி சீல் வைக்க வேண்டும்.

6) இவ்வாறு செய்வதால் ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் கூடுவது தடுக்கப்படுகிறது.
இதனால் கொரனா தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.

*முககவசத்தின் தேவை*

1)முக கவசம் இல்லாமல் எந்த ஒரு தனி நபரும் சாலையில் நடமாட கூடாது.

2)முக கவசம் இல்லாமல் சாலையில் செல்பவர்கள் வேறோரு மக்களுக்கு நோய் தொற்றினை பரப்பி அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கின்றன.
இத்தகைய நபர்கள் மீது
அதிகமான அபராதமும் கடுமையான தண்டனைகளையும்‌ வழங்க வேண்டும்.

*பகுதிக்கு உட்பட்டே பயணிக்க வேண்டும்*

1) ஒவ்வொரு பகுதிகளுக்குள்ளே மக்கள் பயணிக்க வேண்டும்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய அனைத்து கடைகள்,
மார்கெட்டுகள்,
காய்கறி கடைகள்,
மருத்துவமனைகள்,
மருந்தகங்கள்,உணவு விடுதிகள் அந்தந்த பகுதிகளிலேயே இருப்பதால் மக்கள் குறிப்பிட்ட அந்த பகுதியை விட்டு வேறு இடத்திற்கு பயணிக்க தடை விதிக்க வேண்டும். மீறிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..

இவ்வாறு செய்வதால் தமிழகத்தில் கொரனா பரவி வருவதை 15 நாட்களுக்குள் கட்டுபடுத்தி மேலும் பரவாமல் தடுத்து கொரனா தொற்றினை ஒழிக்க முடியும்.

அரசு மருத்துவமனை வசாலிலும் தனியார் மருத்துவமனை வாசலிலும் கொரனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆக்ஸிஜன் பற்றாகுறை காரணமாக ஆம்புலன்சில் உயிருக்கு போராடி நிற்கும் நிலைமையில் உள்ளனர்.

இந்த நிலைமை மாறி
விரைவில்
கொரனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் தந்திடவேண்டும். .

மருத்துவ மனைவாசல்களில் ஆக்ஸிஜன் ‌பற்றாகுறையால் ஆம்புலன்சில் மக்கள் தவிக்கும் நிலை விரைவில் குறைந்து

மக்களின் உயிரை காப்பாற்றும் அரசாக

மக்களுக்காக செயல்படும் அரசாக தமிழகத்தில் மக்களின் மனதில் நிரந்தர முதல்வராக தளபதி அவர்கள் என்றும் நீடிக்க வேண்டும்‌ என்பது எங்களின் விருப்பம்.‌

தமிழக மக்களின் பாதுகாப்பினை கருதி எங்கள் கருத்துக்களையும் பரிசீலனை செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை சமர்பிக்கின்றேன்.

நன்றி வணக்கம்

அகில இந்திய இந்து மகாசபா தலைவர்
டாக்டர்.K.
கோடம்பாக்கம் ஸ்ரீஜி

Leave A Reply

Your email address will not be published.