Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

+2 மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தேர்வு. வழிகாட்டு நெறிமுறைகள்

0

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், அலகுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-

மாணவர்களுக்கென தனி வாட்ஸ் அப் குழுக்களை தொடங்கவும், மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்-ல், மாணவியருக்கு தனியாகவும், மாணவர்களுக்கு தனியாகவும் குழு (Group) ஏற்படுத்த வேண்டும். வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும். மாணவர்கள், வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளை தனித் தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, அதை PDF ஆக மாற்றி அனுப்ப வேண்டும். விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.

வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களை பதிவிடக் கூடாது. ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.