Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

5 மாவட்ட பயணம். தொண்டர்கள் சந்திக்கவோ,வரவேற்பு கொடுக்கவோ கூடாது முதல்வர் முக ஸ்டாலின்.

0

5 மாவட்ட பயணம்: வரவேற்பு கொடுக்க முயற்சிக்கக் கூடாது- திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்.

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாகவே 33 ஆயிரத்தை தாண்டிய வண்ணமே உள்ளது. சென்னையில் சற்று குறைந்த போதிலும் கோவை, மதுரை போன்ற மாநகராட்சி கொண்ட மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்த உள்ளார்.

முதலமைச்சராக பதவி ஏற்றபின், மு.க. ஸ்டாலினின் முதல் வெளிமாவட்ட பயணம் இதுவாகும். இதனால் தி.மு.க. தொண்டர்கள் அதிக அளவில் கூடி வரவேற்பு அளிக்க விரும்புவார்கள். கொரோனா தொற்றி அதிகரித்து வரும் நிலையில் இது சிக்கலை உண்டாக்கும்.

இதனால் திமுக தொண்டர்கள் வரவேற்பு கொடுக்க முயற்சிக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுத்தியுள்ளார்.

#COVID19 தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு பயணிக்கிறேன்.

முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது என்பதால்
கழகத்தினர் என்னைச் சந்திக்கவோ – வரவேற்புக் கொடுக்கவோ முயற்சிக்கக் கூடாது.
அனைவரின் நலனும் மிக முக்கியம்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் ‘‘கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு பயணிக்கிறேன்.

முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது என்பதால் கழகத்தினர் என்னைச் சந்திக்கவோ- வரவேற்புக் கொடுக்கவோ முயற்சிக்கக் கூடாது.

அனைவரின் நலனும் மிக முக்கியம்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.