Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா தடுப்பு பணி. 27 தொண்டு நிறுவனங்களுடன் மு க ஸ்டாலின் ஆலோசனை

0

*கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தொண்டு நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை*

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தடுப்பு பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக 27 தொண்டு நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக 27 தொண்டு நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், 27 தொண்டு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், முக்கிய அமைச்சர்கள், துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.