கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த 10-ந்தேதியில் இருந்து முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகரில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் போலீசார் முக்கிய சாலைகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களை வளைத்துப் பிடித்து வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.
அந்தவகையில் கடந்த 2 நாட்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முக கவசம் அணியாமல் வலம் வந்த 30 ஆயிரம் பேர் மீதும்,
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 1,500 பேர் மீதும் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 50 வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.