கொரோனா மேலாண்மை குறித்து நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.
கொரோனா தொற்றை கையாள்வதில் மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவிலான கள அதிகாரிகளின் அனுபவங்களை அறிய, அவர்களுடன் பிரதமர்நரேந்திர மோடி, இன்று காலை 11 மணிக்கு கலந்துரையாடவுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டம், பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில், கள அதிகாரிகளால் முன்னின்று மேற்கொள்ளப்படுகிறது. இவர்களில் பலர் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு, கற்பனையான தீர்வுகளை கொண்டு வந்துள்ளனர். இது போன்ற முன்முயற்சிகளை பாராட்டுவது, பயனுள்ள மீட்பு திட்டத்தை உருவாக்கவும், இலக்கு உத்திகளை அமல்படுத்தவும், தேவையான கொள்கை தலையீடுகளை ஆதரிக்கவும் உதவும்.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதிலிருந்து, அதிகரிக்கும் இரண்டாவது அலையை கையாள்வதற்கான சுகாதார வசதிகளைத் மேம்படுத்துவது, சுகாதாரப் பணியாளர்கள் கிடைக்கச் செய்வது மற்றும் தேவையான பொருட்களின் தடையற்ற விநியோகம் வரை, பல பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நிலைமையை சமாளிக்க பல அயராத முயற்சிகளை இந்த மாவட்டங்கள் மேற்கொண்டுள்ளன. இதன் வெற்றி கதைகளை நாடு முழுவதும் பல மாநிலங்களில் பின்பற்ற முடியும்.
இவர்களின் கலந்துரையாடல் மூலம், குறிப்பாக வளரும் நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் நடைபெறும் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தை தொடர்வதில் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதோடு, பிரதமர் மற்றும் அதிகாரிகள் தங்களின் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வர்.
இன்றைய கூட்டத்தில் கர்நாடகா, பீகார், அசாம், சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.