அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை.
கொரானா பரவல் தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை..
கொரானா பரவல் தடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் இன்று திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பில்,
தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.பின்னர்
ஆசிரியர் மன்றம் தமிழக அரசிற்கு என்றும் ஆதரவாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ஆசிரியர் மன்றம் குறைந்தபட்சம் ஒரு நாள் ஊதியம் ஏற்கனவே சென்ற ஆண்டு அளித்தது. மேலும் தற்பொழுது கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கி வருகிறது.
மேலும் கொரானா பரவல் தடுப்பு பணிகளுக்கு
தமிழ்நாட்டின் ஆசிரியப் பெருமக்கள்,அரசு ஊழியர் பெருமக்கள் மனமுவந்து ஒருநாள் ஊதியம் சம்பளப் பட்டியல் வழியில் அளித்திடுவதற்கு காத்துக்கொண்டுள்ளனர். எனவே ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் வகையிலான அரசாணையிணை விரைந்து வெளியிட வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பு செய்ததை ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது என்றும்
தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்த வகையில் கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்படுவதை ஆசிரியர் மன்றம் ஆதரிக்கிறது என்றும் கூறினார்.