“பால் விலை குறைத்தும்_அதன் பயன் மக்களுக்கு முழுமையாக சென்று சேர வில்லை”
நடைமுறை இடர்பாடு குறித்து அதிகாரிகள் பார்வைக்கு…
தமிழக அரசு இன்று முதல் பால்விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துள்ளது உள்ளபடியே வரவேற்க்கதக்க ஒன்று. ஆனால் இதன் பயன் முழுமையாக பொதுமக்களுக்கு சென்று சேரவில்லை என்பதே எதார்த்த கள நிலவரம்.

எப்படி…?
ஒரு லிட்டர் பால் வாங்கினால் மூன்று ரூபாயும்_1/2 லிட்டர் வாங்கினால் ஒரு ரூபாய் ஐம்பது பைசாவும்_1/4லிட்டர் வாங்கினால் 75பைசா என விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் 50 -பைசாவும், 25 – பைசாவும் புழக்கத்திலிருந்தே மறைந்து வெகுநாட்களாகிவிட்டன என்பது குறிப்பிடதக்கது.
மேலும் கால் லிட்டர், அரை லிட்டர் என தங்களது குடும்ப தேவைக்கு வாங்கும் சராசரி குடும்பமே தாய் தமிழகத்தில் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
எனவே தமிழக அரசு மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் 25 பைசா, 50 பைசா புழகத்தில் இல்லாததை கருத்தில் கொண்டு 1/2 லிட்டர் மற்றும் 1/4லிட்டர் பால் விலையை நிர்ணயிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கேட்டுகொள்கிறோம். அப்படி செய்தால் மட்டுமே விலை குறைக்கபட்டதற்கான உண்மையான பயன் எட்டப்படும்.
என திருச்சி மாவட்ட
மக்கள் நீதி மய்யம் கட்சி பெருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் தெரிவித்து உள்ளார்