ஆம்புலன்ஸ் ஆக மாறிய கார்கள்; ககன்தீப் சிங் பேடி அதிரடி திட்டம்.
சென்னையில் ஆம்புலன்ஸ் களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அவர்களை ஏற்றிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதே பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி இரண்டு நாளில் 250 ஆம்புலன்ஸ்கள் தயார் செய்துள்ளார்.
அதாவது கார்களில் ஆம்புலன்ஸ் வசதி மேற்கொள்ளப்பட்டு சிறப்பு ஆம்புலன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
15 மண்டலங்களில் இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டை ஒரே நாளில் போக்கிய பேடியின் செயல் தற்போது பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது.