கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு, சென்ட்ரல் விஸ்தா கட்டுமான பணியை முடுக்கிவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மேலும், பல்வேறு துறைகளுக்கான பாராளுமன்ற நிலைக்குழுவை காணொலி காட்சி மூலம் கூட்ட வேண்டும் என இரு அவை சபாநாயகர்களுக்கும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன. அதில் ‘‘சென்ட்ரல் விஸ்தா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அதற்கு ஒதுக்கிய நிதியை ஆக்சிஜன், தடுப்பூசிகளுக்கு ஒதுக்க வேண்டும். நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் வகையில் மையங்கள் அமைக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் வேலையிழந்தவர்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்’’ என்பதை வலியுறுத்தியுள்ளன.