கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காய்கறி, மளிகை கடைகளை போன்று பழ கடைகளும் மதியம் 12 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை கடைபிடித்து பழ கடைகளில் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற மருந்து கடைகளை போல நாட்டு மருந்து கடைகளும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.