Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முழு ஊரடங்கினால் கடன். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்கே தேவர் தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 35).

இவர் உசிலம்பட்டி நகைகடை பஜார் தெருவில் சொந்தமாக நகைபட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பூங்கோதை (வயது 24). இந்த தம்பதிக்கு மகாலட்சுமி(வயது10), அபிராமி(வயது 6), மகன் அமுதன்(வயது 5) 3 குழந்தைகள் உள்ளனர்.

சர்வணன் தந்து நகை பட்டறை தொழிலை விரிவுபடுத்துவதற்காக சிலரிடம் அதிக வட்டிக்கௌ கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் சரவணன் தவித்து வந்தார்.

கடந்த வருடம் கொரோனா முழு ஊரடங்கின் போது பெரும் கடன் சுமைக்கு ஆளானார்.

முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் நகைபட்டறையை மதியம் 12மணிக்கே அடைத்துவிட்டு செல்வதால் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

கடன் கொடுத்தவர்களும் வட்டியுடன் சேர்த்து அசலும் தரவேண்டுமென நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சரவணன் மற்றும் மனைவி விஜி ஆகிய இருவரும் தனது இரு மகள்களுக்கும், ஒரு மகனுக்கும் நகைக்கு பாலீஸ் போடும் கெமிக்கல் மருந்தை கொடுத்து கொலை செய்து தாங்களும் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதற்கிடையே இந்த குடும்பத்தினர் காலை 11மணி வரை வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அவர்கள் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

உடனே உசிலம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்த வந்த போலீசார் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்ர்.

வீட்டில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர்.

அந்த கடிதத்தில் எங்கள் குடும்பத்தினரின் சாவுக்கு யாரும் காரணமில்லை. வாங்கிய கடனே காரணம் என்று கூறப்பட்டு உள்ளது.

எனது அப்பா அய்யாவு நகைபட்டறையில் நகைகள் திருடு போனது. அந்த நகையை நான்தான் திருடினேன் என கூறி கடந்த மாதம் என்மேல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனால் நான் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகினேன் என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.