பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். நெல்லை மாவட்டம் பணகுடியில் அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெற உள்ளது.
1952ல் பிறந்து தமிழ் திரை உலகில் நெல்லை தமிழில் பேசி தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தவர் நெல்லை சிவா.
அவர் 80-களில் நடிக்க தொடங்கி தற்போது வரை குணச்சித்திர நடிகராக, காமெடியனாக திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார்.