கொரொனா பெருந்தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் களஞ்சியம் அறக்கட்டளை
வீட்டுக்கு வீடு உணவு வழங்கும் தன்னார்வலர்கள்
கொரொனா பெருந்தொற்றால் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு
வீடு, வீடாக சென்று ஏழை, எளியவர்களுக்கும், உணவு தேவை படுபவர்களுக்கும் தன்னார்வலர்கள் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.
கொரொனாவால் தனிமைப்படுத்தி கொண்டு மக்கள் பலர் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால், பல ஏழை எளிய, நடுத்தர குடும்பங்கள் உணவு இன்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் களஞ்சியம் அறக்கட்டளை கட்டணமில்லா இலவசமாக உணவுகளை வழங்கி வருகின்றது . பல்வேறு தன்னார்வலர் குழுவினர் திருச்சி பகுதியில் வீடு வீடாகச் சென்று உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றார்கள்.
திருச்சி கோ-அபிஷேகபுரம் புத்தூர் பகுதியில் தினஉலா ஆட்டோ மூலம் புத்தூர், குமரன் நகர், சீனிவாச நகர், ராமலிங்க நகர், மேற்கு, தெற்கு விஸ்தரிப்பு, தில்லை நகர்,உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தின உலா ஆட்டோ சிவா, தின சேவை அறக்கட்டளை பகவதி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் தனிமை படுத்தி உள்ளவர்கள் இல்லங்களுக்குச் சென்று அரசு நிபந்தனைகளை பின்பற்றி முகக்கவசம், கையுறை அணிந்து உணவு வழங்கி வருகின்றனர்.