திருச்சியில் இன்று வியாழக்கிழமை உலக பூமி தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் ராஜாகலனியில் மரகன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் S.TV தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி மரகன்றுகளை நட்டார்.
மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் தலைமை வகித்தார்
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி சங்கத்தின் நிர்வாகி சிவபிராகாசம், தாய்நேசம் அறக்கட்டளை நிர்வாகி ஹெப்சி சத்தியாராக்கினி, தினசேவை அறக்கட்டளை நிர்வாகி பகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
மேலும் இந்நிகழ்வில் அல்லிகொடி,மணிவேல், தினேஷ்,நித்திஷ், தியாகு,சர்வேஸ்வரா, சரவணகுமார், தினேஷ்குமார் ரசிகா,விஜய்,ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.