Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் உலக பூமி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

0

மக்கள் சக்தி இயக்க சார்பில் உலக பூமி தினம் கொண்டாட்டப்பட்டது.

22.04.2021 காலை 7.00 மணியளவில் பொன்மலை ரயில்வே மைதானத்தில் மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் தலைமையில் உலக பூமி தின விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.

பூமி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாளாகும்.

மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை

உலக பூமி தின நாளின் போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

பூமி நாளில் பொது மக்களிடையே அனைவரும் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
அதுமட்டுமன்றி மரம் நடவேண்டும். என வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.

தமிழ்நாட்டில் 17.59 சதவீத பரப்பளவு அதாவது 22,877 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தான் வனப்பகுதி கொண்ட பகுதியாக உள்ளது. ஒரு நாடு வளமான பகுதியாக இருக்க வேண்டும். என்றால் 33.3 சதவீதம் அடர்த்தியான வனங்களாக இருக்க வேண்டும். விளைநிலங்கள் விற்கப்பட்டு காங்கீரீட் கட்டிடங்களாக மாறிவிடுகின்றன. காட்டு வளமும் மளமளவென மாய்ந்து வருகின்றன. மர அழிப்பால் நிழற்பாங்கு குறைதல், மண் அரிப்பு ஏற்படுதல், வெள்ளப்பெருக்கு, வெப்ப மூட்டம் அதிகரித்தல், மழைப்பொழிவு குறைதல், நீர் தக்கவைப்பு குறைதல், வறட்சி ஏற்படுகிறது அது மட்டுமல்ல மரங்களை சார்ந்து வாழும் புழு, பூச்சி, பறவைகள், விலங்குகள் இன்று இடம் பெயர்ந்தும் காணாமல் போய்விடுகின்றன. ஒருவர் ஒரு மரம் வளர்த்தால் மனித சமூகம் வளரும். சமுதாயம் வளரும். வரும் சந்ததியினருக்கு பசுமையான சூழலை கொடுக்கலாம்.
நாம் ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 18 முறை சுவாசிக்கிறோம். ஒரு முறைக்கு 0.5 லி காற்றை சுவாசிக்கிறோம். ஒவ்வொரு நாளும் 22,000 முறை சுவாசித்து 16 கி.கி. ஆக்சிஜனை சுவாசித்து உயிர் வாழ்கிறோம். மனித சமுதாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும், சேவை செய்யும் மனப்பான்மையுடன் நமது தேவைக்காக மரம் நட்டு வளர்ப்போம் என்கிற வரணும், சுற்றுச்சூழல் மேம்பாடு மாசுபாட்டினை குறைத்திட பறவை இனங்களுக்கு புகலிடம் அளித்திட, மண்ணில் ‌‌ஈப்பதத்தையும் வளத்தையும் தக்க வைத்திட, மண் அரிப்பை தடுத்திட, மழைப்பொழிவு ஏற்பட்டிட, காடு வளம் வேண்டி மரம் வேண்டும்.

மரம் வளர்த்து, புவியை காப்போம், புவி வெப்பத்தை தடுப்போம் என மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மக்களுக்கு மரக்கன்று வழங்கியும், பதாகை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.

நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மே.க.கோட்டை ஈஸ்வரன், பி.ரஞ்சித், என்.தயானந்த் , முன்னாள் கவுன்சிலர் கோ.ரமேஷ், சாமி தற்காப்புக் குழு நிறுவனம், வாத்தியாருமான டி.ஜீவானந்தம். மலையடிவாரம் செந்தில்குமார், செல்வி.சகானஸ்ரீ, சீனிவாசன், மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.