Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை. காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

0

*உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !*

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கன்னியாகுமரி மாவட்டம் , குளச்சல் பகுதியை சேர்ந்த அலைக்சாண்டர்,ஹென்லின், தாசன் ஆகிய மூன்று பேர் கர்நாடக மாநிலம் மங்களூர் கடற்பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கப்பூர் கப்பல் மோதி படகு சேதமடைந்த விபத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

பரிதாபமாக உயிரிழந்துள்ள அலைக்சாண்டர்,ஹென்லின், தாசன், ஆகியோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

இது போன்ற கொர சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் போது மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும், செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது

எனவே உயிரிழந்துள்ள மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழகஅரசு இழப்பிடு தலா ரூ 5 லட்சம் வழங்க வேண்டும் மேலும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும் எனஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.