திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான
மு. பரஞ்ஜோதி இன்று இரண்டாம் கட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
அதன்பின் அவர் கூறுகையில்:
கொரோனா இரண்டாம் கட்ட அலை தற்போது பரவிவரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கட்டாயம் முக கவசம் அணிந்தும் தகுந்த சமூக இடைவெளியுடன் பொது இடங்களில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.