Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா 2ம் கட்ட அலை , திருச்சி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.

0

திருச்சி மாநகர காவல்துறை நடவடிக்கை :

கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும் 14 இடங்களில் பொதுமக்களுக்கு நோய் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு முகக்கவசம் வழங்கப்பட்டது.

மேலும் முகக்கவசமின்றி சுற்றித் திரிந்த 1174 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் தொகை சுமார் ரூபாய்.2,34,000/- விதிக்கப்பட்டது, தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய்.33,500/- அபராதம் விதிக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் கொரோனோ நோய்த்தொற்றைக் குறைப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.