தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 7 மணிக்கு அமைதியான முறையில் முடிவடைந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் 3,998 வேட்பாளர்களும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில், 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் உள்பட 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுனர்.
காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றினர்.
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி,மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 தொகுதிகள் உள்ளன.
கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஆர்.மனோகரன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் வீரசக்தி,
மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாதன், திமுக வேட்பாளர் கே.என். நேரு
ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன், திமுக வேட்பாளர் பழனியாண்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்,
திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார், திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முருகானந்தம்
மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி,
அமைச்சர் வளர்மதி, முன்னாள் புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், ஆகியோரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
மேலும் 9 தொகுதியிலும் அனைத்து வேட்பாளர்களும் ( திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தவிர) தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு 71.9% ஆகும் .
தற்போது வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.
மே 2 வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.