திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக வெல்ல மண்டி நடராஜன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க., சார்பில் புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான மனோகரன் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க., வேட்பாளராக, மத போதகரான இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.
மானாமதுரையை சேர்ந்த இனிகோ இருதயராஜ், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தை நடத்தி வருவதோடு, மத போதகராகவும் செயல்பட்டு வருகிறார்.
சென்னையில் வசிக்கும் இவர், எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், தொகுதியில் இருப்பரா? எப்போதாவது தொகுதிக்கு வந்தாலும், அவரை சந்திக்க முடியுமா? என்பன போன்ற சந்தேகங்கள் மக்களிடம் உள்ளது.
ஏனென்றால் திருச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு திருச்சி பக்கமே வருவதில்லை.
இது தவிர, திருச்சியை சேர்ந்த அமைச்சரையும், முன்னாள் அரசு கொறாடாவையும் எதிர்த்து களம் இறங்கியுள்ள இனிகோ இருதயராஜ், தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்க முடிகிறது. சாதனை சொல்லி ஓட்டுக் கேட்க முடியவில்லை.
இதனால், கட்சியினர் ஓட்டுக்களுடன், தான் சார்ந்த மதத்தினரின் ஓட்டுக்களை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
பூர்வீகம் மானாமதுரை, இருப்பிடம் சென்னை, திருச்சியில் வேட்பாளராக போட்டிடும் மத போதகரான இனிகோ, எதைச் சொல்லி ஓட்டுக் கேட்பார்.
ஏற்கனவே, அவரது மதத்தினருக்கான சபைகளை அணுகி ஆதரவு திரட்டியுள்ளார். இருப்பினும், எதிரணியில் இருக்கும் அ.தி.மு.க., வேட்பாளர் நடராஜனையும், அ.ம.மு.க., வேட்பாளர் மனோகரனையும் முறியடிக்க, துணிச்சலான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை நிகழ்ச்சியில், இனிகோ பங்கேற்றுள்ளார். அதில், அவர் பேசுகையில், தமிழகத்தில், 3, 4 சதவீதம் ஓட்டுக்களை வைத்துள்ளவர்கள் கூட, தனிக் கட்சி துவங்கியுள்ளனர். கிறிஸ்தவர்களின் ஓட்டு, 17 சதவீதம் உள்ளது. கிறிஸ்தவர்களின் வாக்காளர் பலத்தை வெளிக்காட்டுவதற்காகவே, தி.மு.க.,வில் சீட் பெற்று, தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இந்த தேர்தலில், என்னை வெற்றி பெற வைத்தால், கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து, நமக்காக தனிக் கட்சியை துவங்குவேன், என்று கூறியுள்ளார்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மத போதகராக இருக்கும் இனிகோ, தி.மு.க.,வில் வேட்பாளராகி இருக்கிறார். அவர் எம்.எல்.ஏ.,வானால், முழு நேர அரசியல்வாதியாகி விடுவாரா? மத போதகராக இருப்பரா? என்பதே புரியாத புதிர். அப்படியிருக்கும் போது, கிறிஸ்தவர்களுக்காக கட்சி துவங்குவேன், என்று கூறியிருப்பது பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் ஆக முடியுமா என்பது இவரது தேர்தல் முடிவின் பின் தான் தெரியும்.
திருச்சி கிழக்கு பகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் எனவே இனிகோ இருதயராஜ் நிலை ♂️ ♀️