Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மத்திய மண்டல அளவிலான தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.

0

தீயணைப்பு மீட்புப்பணித்துறை இயக்குநர் டாக்டர்.சி.சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின்படி, மத்திய மண்டல துணை இயக்குநர் .P.சரவண குமார். அவர்களின் ஆலோசனைப்படியும், தலைமையிலும் மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாப்பு அலுவலர்களுக்கு (Safety Officer) தீபாதுகாப்பு குறித்த கருத்தரங்கு இன்று காலை 11.00 மணி முதல் 01.30 மணிவரை திருச்சிராப்பள்ளியில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தில் சுகாதாரப்பணிகள் உள்ள இணை டாக்டர்.A.மதுரம் ஹாலில் நடைபெற்றது.

தமிழ்நாடு சுகாதாரப் பணிகள் இணைஇயக்குநர் லட்சுமி கலந்துகொண்டு கருத்தரங்கினை துவக்கி வைத்தார். சமீபத்தில் மும்பை மாநகரத்தில் உள்ள Sunrise மருத்துவமனையில் 9 கொரோனா தொற்று நோயாளிகளும், விஜயவாடாவில் உள்ள Shrey மருத்துவமனையில் சில கொரோனா தொற்று நோயாளிகளும், மற்றும் அஹமதாபாத் நகரில் உள்ள Shrey மருத்துவமனையில் 8 கொரோனா தொற்று நோயாளிகளும் தீவிபத்தில் இறந்துள்ளனர்.

இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களான திருச்சி, கரூர் பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் பணிபுரியும் பாதுகாப்பு அலுவலர்களுக்கு தீபாதுகாப்பு குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீத்தடுப்பு சாதனங்களை பராமரித்தல் தீவிபத்து ஏற்பட்டால் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை, வெளியேறும் போலி ஒத்திகை ஒத்திகை பயிற்சி நடத்துதல் தொடர்பான விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

இக்கருத்தரங்கில் திருச்சிராப்பள்ளி மாவட்ட அலுவலர் திருமதி.கு.அனுசுயா உதவி மாவட்ட அலுவலர் சு.கருணாகரன் ஆகியோர் பங்கேற்றனர் மருத்துவமனைகளில் தீவிபத்து ஏற்படாமல் தடுக்கும் வன்னம் இக்கருத்தரங்கானது மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பான முறையிலும் இருந்தது என கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.