Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுகவின் சலுகைகளைப் பெற இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.ப.குமார் பிரச்சாரம்.

0

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் போட்டியிடுகிறார்.

அவர் நேற்று மாலை சின்ன சூரியூர், பெரிய சூரியூர், காந்தலூர், அண்ணாநகர் போலீஸ் காலனி, வீரம்பட்டி ஆகிய கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் பெண்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அவர்கள் மத்தியில் வேட்பாளர் ப.குமார் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலேயே பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கிய ஒரே அரசு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தான். இந்த அரசு மீண்டும் அமைந்தால் உங்களுக்கு ஆண்டு தோறும் பொங்கல் பரிசு ரூ.2,500 கிடைக்கும்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க அரசு அமைந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்குவேன் என்று நமது முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்தையும் இந்த அரசு நிறைவேற்றும். அந்த சலுகையை பெற வேண்டுமானால் நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது வேட்பாளருடன் ஒன்றிய செயலாளர்கள் ராவணன், கும்பகுடி கோவிந்தராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜ மணிகண்டன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வாக்கு சேகரித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.