திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி முதலியார் சத்திரம், காஜாபேட்டை பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வீரசக்தி
டார்ச்லைட் (மின்கல விளக்கு) சின்னத்தில் தனது கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார்.
காஜாபேட்டை பகுதி குறுகளாக உள்ள மின் வசதி கூட இல்லாத தெருக்களில் நடந்து சென்று வாக்கு சேகரித்த போது ஒர் ஏழை சிறுவன் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாட இருந்தான் வேட்பாளர் வீரசக்தியை பார்த்தவுடன் அவரையும் தன்னுடன் பிறந்த நாள் கொண்டாட அழைத்த சிறுவனின் அழைப்பை ஏற்று அந்த சிறுவனுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.
ம. நீ ம.வேட்பாளர் தன்னுடன் பிறந்த கொண்டாடியதால் சிறுவன் மிகுந்த மகிழ்ச்சி.
இப்படி எளிமையாக பழகும் வேட்பாளரை அந்த பகுதியில் உள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியமாக பார்த்து உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு என கூறினார்.
அவருடன் மநீம மாவட்ட
பொருளாளர் கிஷோர் குமார், நற்பணி மன்ற நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் வீரசக்தி உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.