*பெண்களை அவதூறாக பேசும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி அதிமுகவினர் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம்*
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரைக் தரக்குறைவாக பேசிய திமுக எம்.பி. ராஜாவையும்பெண்களை இழிவாக பேசி வரும் காடுவெட்டி தியாகராஜன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை கண்டித்து திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். திருவெறும்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராவணன், துவாக்குடி நகர எஸ் பி பாண்டியன்,அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்ரமணி, கூத்தைப் பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூறுகையில்:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் பற்றி தரக்குறைவாக பேசிய திமுக எம்பி ராஜா ,
அதேபோல் பெண்களை இழிவாக பேசி வரும் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மற்றும் இளைஞர் அணி பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட திமுகவினரை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்கள் மீதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீநிதி சதீஷ்குமார், வேங்கூர் ரத்தினம்,சாம்பசிவம், திருவெறும்பூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரத்தினவேலன்,
திருவெறும்பூர் சொசைட்டி துணைத்தலைவர் தீன், வட்ட செயலாளர்கள் மாரிமுத்து முருகானந்தம் வேல்முருகன் ,நவல்பட்டு பால மூர்த்தி, ஆவின் பாஸ்கர், சபரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செந்தில்குமார், மகளிர் அணி தனம் ஜெயந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்