திருச்சியில் காவலர்களுக்கே ஓட்டுக்கு துட்டு. சாமானியனின் நிலை ? மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார் அறிக்கை
“காலர்களுக்கே பணபட்டுவாடா_சாமானியனின் நிலை….?
திருச்சி மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமாரின் அறிக்கை.
எப்படி திருச்சி-மேற்கில் தேர்தல் நேர்மையாக நடக்கும்.
தாய் தமிழகத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் “தபால் வாக்குகள்” முதல் கட்டமாக மும்மரமாக நடந்து வருகிறது. மேலும் மேற்படி தபால் வாக்கை பெற பிரதான அரசியல் கட்சிகள் சாம, பேத, தான என சகல விதத்திலும் முயற்சித்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட காவலர் குடியிருப்பு மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சின்னத்தில் வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் திருச்சிராப்பள்ளி – மேற்கு தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒரே நேரத்தில் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி சோதனை விளைவாக வாக்குக்கு பணம் வாங்கிய காவலர்கள் மற்றும் கொடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில காவலர்கள் இடமாற்றம் செய்யபட்டதாக செய்திகள் வருகின்றன.
அதிகாரம் பொருந்தியதாக தமிழக தேர்தல் களம் மாறியுள்ளது. மிக குறிப்பாக திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியில் படித்த, பண்புமிக்க காவலர்களையே விலை பேச ஒரு கூட்டம் உண்டு என்றால். ஏழை, எளிய மக்களின் வாக்கை விலை பேசி_தன்னை அதிகாரத்தில் நிலை நிறுத்த இந்த கூட்டம் எந்த எல்லைக்கும் செல்லும்.
எனவே தமிழக தலைமை தேர்தல் ஆணையர் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உட்பட திருச்சியில் உள்ள அனைத்து தொகுதியிலும் தேர்தல் நேர்மையாக நடக்க மிக உறுதியான நடவடிக்கை எடுப்பதோடு குறைந்தே பட்சம் புகாருக்கு உள்ளான திருச்சி மேற்கு தொகுதி தேர்தலை ரத்தோ செய்து வேறு ஒரு நாளில் தனியாக கடுமையான கட்டுபாடுகளுடன் நடத்த உத்தரவிட வேண்டும் என ஒரு நேர்மையை நேசிக்கும் வழக்கறிஞர் என்ற முறையில் மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
வக்கீல்.S.R.கிஷோர்குமார்,
மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.