Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைத்துத் தரப்படும் உள்ளிட்ட 20 வாக்குறுதிகளை அளித்து உள்ளார் மு.பரஞ்சோதி

0

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி தான் வெற்றிபெற்றால் மண்ணச்சநல்லூர் பகுதியில் கீழ்க்கண்ட
பணிகள் செய்து முடிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

1. அய்யம்பாளையம், ஏவூர், ஆமூர், குணசீலம் ஊராட்சியில் சுமார் 2500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் காவேரியில் நிரந்தர கொரம்பு அமைக்க பாடுபடுவேன்.

2. காவேரி உப்பாறு நீர்த் தேக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்.

3. கொடுந்துறை வாய்க்கால் காவேரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
4. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Arts and Science) கொண்டு வரப்படும்.

5. விவசாயிகள், புஷ்ப வியாபாரிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நொச்சியத்தில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்படும்.

6. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் இளைஞர்களுக்காக மிகப்பெரிய பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்.

7. கரட்டாம்பட்டி ஊராட்சியில் அரசு மாணவர், மாணவி விடுதி அமைத்து தரப்படும்.
மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தரப்படும்.

9 மண்ணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் உரிமையியல், குற்றவியல் நீதிமன்றம் அமைத்துதரப்படும்.

10. சிறுகனூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்து தரப்படும்.

11. கொணலை ஏரியின் நீர்வரத்தினை கொண்டு வரும் வகையில் புதிய நீர்வழித்தடம் 1 கி.மீ நீளத்திற்கு அமைத்து தரப்படும்.

12. மண்ணச்சநல்லூர் பெரூராட்சி, ச.கண்ணனார் பேரூராட்சி
பகுதியில் பாதாளசாக்கடை முடிவடைந்து, அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி செய்துதரப்படும்.

13. மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து அரிசி ஆலைகள் நல்ல நிலையில் இயங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுத்து தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்.

14. அண்ணாநகர் நரசிங்கமங்கலம் சேனியார் கள்ளிக்குடி புள்ளம்பாடி வாய்க்கால் பாலம், பெருவளைவாய்க்கால் பாலம் மூன்று பழைய பாலங்களையும் இடித்துவிட்டு புதிதாக பேருந்து செல்லும் வகையில் அமைத்து தரப்படும்.

15. இந்திராநகர், வ.உ.சி நகர் மற்றும் மெயின்ரோடு பகுதிகளுக்கு கொள்ளிடம் குடிநீர் சுமார் பலட்சம் கனக்கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தனலெட்சுமி நகரில் அமைத்து தரப்படும்.

16. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும், பக்தர்கள் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வகையில் ஊருக்குள் செல்லுமாறு பேருந்து நிலையம் விரிவுப்படுத்தப்படும்.

17. மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றுக்கரையில் 5.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ்நிலை நீர்தேக்க தொட்டியும், மண்ணச்சநல்லூர் பகுதியில் 7.00 லட்சம் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், கொள்ளிடத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வரை 600 mm Castle பைப்லைன் அமைத்து தரப்படும்.

18. உளுந்தங்குடி பெருவளை வாய்க்கால் மற்றும் புள்ளம்பாடி
வாய்க்காலில் இரண்டுபாலம் அமைத்து தரப்படும்.

19. மேலசிதேவிமங்கலம் இரண்டு பாலம் மற்றும் பங்குனி வாய்க்காலில் கெங்காளில் முத்தையன் கோவில் பாலம் ஒன்று அமைத்து தரப்படும்.

20. சமயபுரம் வரும் பக்தர்களுக்கு நடை பாதை அமைத்துத் தரப்படும்.

உள்ளிட்ட 20 வாக்குறுதிகளை மு.பரஞ்சோதி அறிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.