திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாதன் மிளகுபாறை பகுதியில் முதியவர்கள் காலை தொட்டு கும்பிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் திருச்சி
மேற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்
பத்மநாதன் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை,பறவைகள் சாலை, மிளகுபாறை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று மக்களை சந்தித்து, முதியோரிடம் காலில் வீழ்ந்தும், ஆசிர்வாதம் பெற்று வாக்குகள் சேகரித்தார்.
அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மிளகுபாறை அருகிலுள்ள உள்ள ஒரு டீக்கடையில் வழக்கறிஞர் ராஜ்குமார், பகுதி செயலாளர் நாகநாதர்பாண்டி, வேலுப்பிள்ளை மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து டீ குடித்தார்.
இந்தப் பிரச்சாரத்தில் அதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், மாவட்டத் துணைச் செயலாளர் வனிதா, பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஒண்டி முத்து, பொறுப்பாளர் சிட்டி பாபு, இணை பொறுப்பாளர் தாரகேஸ்வரி மற்றும் , அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…