தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த காலை சேலத்தில் இருந்து கிளம்பி நாமக்கல் வழியாக முசிறி தாண்டி செல்லும் வழியில்
முசிறி பாலத்தில் திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், மண்ணச்சநல்லூர் வேட்பாளருமான மு. பரஞ்ஜோதி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
துறையூர் வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி. முசிறி வேட்பாளர் எம்எல்ஏ செல்வராஜ்,
அமைச்சர் வளர்மதி, ஒன்றிய செயலாளர்கள் ஆமூர் ஜெயராமன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் ராம் மோகன், அந்தநல்லூர் முன்னாள் துணைத்தலைவர் அன்பரசு, இன்ஜினியர் கதிரவன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், உப்பிலியாபுரம் பேரூராட்சி தலைவர் இராஜாங்கம் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்,திரளாக கலந்து கொண்டனர்.