Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.5000 அபராதம். திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

0

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று குறைந்து வந்தது.

இந்தநிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் வேகமாக கொரோனா பரவி வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே இதனை தடுக்க பொதுமக்கள் அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுஇடங்களில் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ‌.200-ம்,

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்களுக்கு ரூ.500-ம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 -ன் படி அபராதம் விதிக்கப்படும்.

வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்களுக்கு வரும் பொது மக்கள் முக கவசம் அணிய வில்லை என்றால் அந்த வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் அபராதத்தில் இருந்து தப்பிக்கவும் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.