Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவேன் : அரசியலை விட்டு விலகும் சசிகலா.

0

சிறையில் இருந்து கடந்த மாதம் வெளிவந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அரசியலை விட்டே விலகுவதாக தற்போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசியலைவிட்டு சசிகலா ஒதுங்கியதற்கான காரணம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சசிகலாவின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

சசிகலா அவரது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். சசிகலாவின் அறிக்கை எனக்கு சோர்வை வரவழைக்கிறது.

சசிகலாவை அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அரை மணி நேரம் வலியுறுத்தினேன்.

எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்களே என்பதாலே அப்படி கூறியிருக்கிறார்கள்.

தான் ஒதுங்கி இருந்தால்தான் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என நினைத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். தான் ஒரு பேசுபொருளாக இருக்க சசிகலா விரும்பவில்லை என்பதால் ஒதுங்க முடிவு செய்துள்ளார்.

அரசியலைவிட்டு ஒதுங்கினால் உடனே பின்னடைவு என்றெல்லாம் கூறமுடியாது. ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையவேண்டும் என்ற கருத்தை சசிகலா கூறியுள்ளார்.

அதேநேரம் எனது சித்தி என்பதற்காக சசிகலா மீது என் கருத்தை திணிக்கமுடியாது. அவரின் மனசாட்சியாக நான் பேசமாட்டேன். மேலும் சட்டப்போராட்டம் மூலம் அதிமுகவை மீட்டெடுக்க சசிகலா போராடிக்கொண்டு தான் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.