Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் ப.குமார் பற்றி பொதுமக்கள் கருத்து …

0

திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் உள்ளது திருவெறும்பூர். பாரத மிகுமின் நிலையம் (பெல்), துப்பாக்கித் தொழிற்சாலை (ஓஎப்டி), கனகர உலோக ஊடுருவி தொழிற்சாலை (எச்ஏபிபி) ஆகிய 3 முக்கியமான மத்திய அரசின் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள தொகுதியாக திருவெறும்பூர் விளங்குகிறது. மேலும் இவற்றைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இத்தொகுதியில் செயல்படுகின்றன.

 

அதுமட்டுமின்றி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி), தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப பூங்கா, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகம், அரசு ஐடிஐ, துவாக்குடி அரசுக் கல்லூரி உள்பட ஏராளமான அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள், தனியார் பள்ளி, கல்லூரிகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.

திருச்சி மாநகராட்சி வார்டுகளான 7, 27, 28, 29, 30, 31, 32, 36 ஆகியவற்றுடன் துவாக்குடி, கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், நவல்பட்டு, பழங்கனாங்குடி, பனையக்குறிச்சி, கீழ முல்லக்குடி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், கிழக்குறிச்சி, வாளவந்தான்கோட்டை, கும்பக்குடி, குண்டூர், சூரியூர் உள்ளிட்ட பகுதிகளும், அவற்றைச் சார்ந்த கிராமங்களும் இத்தொகுதியின் கீழ் வருகின்றன. இவற்றில் ஆண்கள், பெண்கள் திருநங்கைகள் என மொத்தம் 2,91,891 வாக்காளர்கள் உள்ளனர்.

மத்திய அரசு தொழில் நிறுவனங்களும், மத்திய கல்வி நிறுவனங்களும் அதிகளவில் இருப்பதால், இத்தொகுதியில் தமிழர்கள் மட்டுமின்றி பிற மாநிலத்தவர்கலும் வசித்து வருகின்றனர்.

பரப்பளவு அடிப்படையில் நகரமும், கிராமமும் கலந்த தொகுதியாக இருப்பதால் இங்கு வழக்கம்போல சாலை, குடிநீர் தட்டுப்பாடு, தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு குறைவில்லை. எனினும், அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானாவில் இருந்து துவாக்குடி வரை சர்வீஸ் சாலை (அணுகுசாலை) அமைக்க வேண்டும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பொன்மலை ரயில்வே பணிமனை, குடியிருப்புகளுக்குச் செல்ல சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பிரதானமாக காணப்படுகின்றன.

இவற்றை வலியுறுத்தி இத்தொகுதி மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், சட்டமன்றத்தில் குரல் கொடுத்தும் இதுவரை விடிவு ஏற்படவில்லை.

தற்போது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முறை திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

திருச்சி திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி, ஆகிய சட்டமன்ற தொகுதியின் மாவட்டச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு பகுதியாக சென்று பூத் கமிட்டி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கி வந்தார்.
தமிழக முதல்வர் ஜனவரி மாதம் திருச்சி வந்தபோது சாலை பணிகளுக்காக 12 கோடி ரூபாய் பேசி ஒப்புதல் வாங்கினார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் சூரியூர் ஜல்லிக்கட்டு தடை விதித்தது.
ப.குமார் பெரிதும் முயற்சி எடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நிர்வாகத்தினரிடம் பல கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி வாங்கி கொடுத்தார்.

செபஸ்தியார் கோயில் புனரமைப்பு பணிக்கு தனது சொந்த நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் அளித்து உதவினார்.
திருவெறும்பூர் பகுதியிலுள்ள மாற்றுக் கட்சியினர் சுமார் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இதுவரை அதிமுகவில் இணைந்துள்ளார்.

இளைஞர்கள் விளையாட்டு போட்டி நடத்த வேண்டும் என கேட்டால் உடனடியாக அவர்களை ஊக்குவிக்கும் நேரில் சென்று பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகிறார்.

திருவெறும்பூர் மட்டும் இல்லாமல் எங்கு யார் கேட்டாலும் கபடி போட்டிகள், கிரிக்கெட் போட்டிகள் என எந்த போட்டிகள் நடத்த வேண்டும் என யார் கேட்டாலும் அந்த விளையாட்டுப் போட்டிகளை நடத் த அனைத்து உதவிகளும் செய்து தருவார் என்பது குறிப்பிடத்தக்கது

ப.குமாருக்கு எதிராக திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் மகேஷ் பொய்யாமொழியும், மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் பொது செயலாளர் முருகானந்தம் அவர்களும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் முருகானந்தம் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டாலும் இரண்டாவது இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக திருவெறும்பூர் தொகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

தற்போதைய எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி க்கு எதிராக திருவெறும்பூர் தொகுதியில் அவருக்கு எதிராக செயல்பட சொந்த கட்சியினரே திட்டமிட்டு வருகின்றனர் உதாரணமாக நவல்பட்டு விஜி, மற்றும் கே என் நேரு உடன் நெருக்கமாக இருந்ததால் நீக்கப்பட்ட வட்ட செயலாளர்களும் மகேஷ் பொய்யாமொழி க்கு எதிராக செயல்பட தயாராக உள்ளனர்.

மேலும் அதிமுக சார்பில் ப.குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றால் இத்தொகுதியில் உள்ள நெடுநாள் பிரச்சனையான பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் ரோடு அமைப்பது, பொன்மலை குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்ல சுரங்கப் பாதை அமைப்பது போன்ற பணிகளை உடனடியாக நிறைவேற்றித் தருவார் என்பதால்
திருவெறும்பூர் தொகுதியில் ப.குமாரின் வெற்றி உறுதியாகி விட்டது என்றே திருவெறும்பூர் தொகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.