விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாத மத்திய ,மாநில அரசுகளுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டும் வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க மக்கள் தயாராக வேண்டும் :
செயல் தேசிய மதவாத காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு.
தேசிய மதவாத காங்கிரஸ்
கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி நடைபெற்றது.
கூட்டத்தில் தீர்மானங்களாக தமிழகத்தில் பன்னாட்டு பெரு வணிக நிறுவனங்களின் தேவைக்காக உயர் மின் கோபுரங்கள் அமைப்பது, எண்ணெய்க் குழாய்கள் போடுவது,
எரிவாயுக்குழாய் பாதை, எட்டு வழி சாலை என பல்வேறு திட்டங்களின் பெயரால் விவசாய நிலங்கள் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு தன்னிச்சையாக பறிக்கப்படுகின்றன, இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வுரிமை பறிபோகின்றது, சொந்த நாட்டிலேயே அனாதைகளாக ஆக்கப்படுகிறார்கள், இதுபோன்ற எதேச்சதிகார முறையில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு கைவிட வில்லை,
மத்திய அரசு விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாத மத்திய ,மாநில அரசுகளுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டும் வகையில் அவற்றை வரும் சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க மக்கள் தயாராக வேண்டும்,
கொரோனா காரணம் காட்டி சென்ற ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து இன்றுவரை எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப் படாமல் இருப்பது கவலை அளிக்கிறது, மற்ற மாநிலங்களில் கல்விக் கூடங்கள் திறந்து உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் திறக்காதது கடும் கண்டனத்துக்குரியது,
மாணவர்கள் வேலைவாய்ப்பு, நீட் போன்ற தேர்வுகளுக்கு தகுதியற்றவர்களாக உருவாக்க அரசு முயற்சிக்கிறது,
தமிழக அரசு பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்களை இக்கூட்டத்தில் நிறைவேற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் சாரதி தலைமையில் மாநில துணைத்தலைவர் எத்திராஜ், மாநில இளைஞரணி தலைவர் சுதர்சன் துரை, மாநகர தலைவர் ஜெயக்குமார், முன்னாள் மாநில செயலாளர் டாக்டர் சந்திரமோகன் முன்னிலையில் கோவிந்தராஜ் ஏற்பாட்டில் மாநில மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி மகளிர் அணி என அனைத்து அணி நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.