Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் மு. பரஞ்ஜோதி தீவிர பிரச்சாரம்

0

https://trichyxpress.com/

திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் அதிமுக புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான மு.பரஞ்ஜோதி தீவிர ஓட்டு பிரச்சாரம்.

மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி இன்று மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அழகியமணவளம், தீராம்பாளையம், திருவெள்ளறை, பூனாம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னாள் அமைச்சரான மு.பரஞ்ஜோதி பிரச்சாரத்திற்கு சென்ற இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து இரட்டை இலைக்கு தான் எங்கள் ஓட்டு என உறுதி கூறினர்.

வேட்பாளர் மு.பரஞ்ஜோதி உடன் அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.