Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மேற்குத் தொகுதி: “உங்களால் தான் நான் உங்களுக்காகவே உழைப்பேன் நான்’ எனக்கூறி பத்மநாதன் பிரச்சாரம்.

0

திருச்சி மேற்குத் தொகுதி:

மாநிலத்தின் மையப்பகுதியாக விளங்கும் இந்தத் தொகுதியானது 2006 பொதுத் தேர்தல் வரை திருச்சி 2 என்று அழைக்கப்பட்டு வந்தது.

பின்னர், நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி மேற்கு தொகுதி என பெயர்மாற்றம் கண்டது. தொகுதி முழுவதும் மாநகரப் பகுதியைக் கொண்டது. படித்த மற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள் இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர். மாநகராட்சியின் 39 முதல் 42 மற்றும் 44 முதல் 60 வரையிலான வார்டுகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், மாநகராட்சி மைய அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, ரயில் சந்திப்பு என பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய பேருந்து நிலையமும் இத்தொகுதியின் அடையாளமாக உள்ளது.

1957 முதல் இதுவரை இந்தத் தொகுதியில் தலா 6 முறை திமுக, அதிமுக கட்சிகளும், 2 முறை கம்யூனிஸ்ட்டுகளும் வென்றுள்ளன. அதிமுக ஆட்சியில் முதல் இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதி இது. 2011 இல் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் திமுகவின் கேஎன்.நேருவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.மரியம்பிச்சை, சாலை விபத்தில் உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

2011 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மு.பரஞ்ஜோதி (69,029) போட்டியிட்டு, 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் (நேரு 54,345) வெற்றி பெற்றார்.

2016 தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கே.என். நேரு, 92,049 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரன் 63,202 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார்.

அமைச்சர்களாக தமிழக சட்டப் பேரவையை அலங்கரித்த அன்பில் தர்மலிங்கம், நல்லுசாமி, கே.என்.நேரு, மரியம்பிச்சை, பரஞ்ஜோதி ஆகியோரை வெற்றி பெறச் செய்த தொகுதி. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் (1957) கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம். கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. 1962லும் அவர்தான் இந்தத் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார். 1967, 1971 ஆகிய தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது என்றாலும், கட்சியிலிருந்து எம்ஜிஆர் பிரிந்தது முதல் இந்தத் தொகுதி அதிமுக கோட்டையாகத் தொடர்ந்தது.

( திமுக அன்பில் பொய்யாமொழி ஒரு முறை)

ராஜீவ் காந்தி அனுதாப அலையில் இந்தத் தொகுதியை 1991 இல் அதிமுக மீண்டும் கைப்பற்றியது. பின் 1996 முதல் திமுகவின் செல்வாக்குதான் மேலோங்கி நிற்கிறது. இதன் காரணமாகத்தான் லால்குடியிலிருந்து திருச்சி மேற்கு தொகுதிக்கு இடம் மாறினார் கே.என். நேரு.

2021 தேர்தலிலும் அவரே போட்டி உள்ளார் அதிமுக சார்பில் நகரக் கூட்டுறவு தலைவர் பத்மநாதன் போட்டியில் உள்ளார். மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் SDPI யினர் போட்டி, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சையினர் போட்டியிடுகின்றனர்.

தற்போது அதிமுக சார்பில் போட்டியிடும் பத்மநாதன் திருச்சி கருமண்டபம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
தற்போது இவர் பணம் எதுவும் செலவு செய்யவில்லை சிலர் எனக்கூறி வருகின்றனர் அது பற்றி தொகுதியிலுள்ள அதிமுக நிர்வாகியிடம் விசாரிக்கையில்,

இது முற்றிலும் தவறான தகவல், பத்மநாதன் பணம் தராததால் நாங்கள் மற்ற வேட்பாளர்களுக்கு வேலை செய்யத் தொடங்கியதாகவும் உள்ளனர். நாங்கள் யார் பணத்திற்காக வேலை செய்யவில்லை பத்மநாதன் அன்பானவர், அனைவரிடமும் எளிமையாகப் பழகக்கூடியவர்,
உங்களை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் அதன் கட்சியின் முதன்மை செயலாளர், அவர் கட்சிப் பணியாற்ற எப்போதும் சென்னையில்தான் இருப்பார். அந்த கட்சியில் உள்ள பிரச்சினையை தீர்க்க தமிழகம் முழுவதும் சுற்றி வருபவர். தொகுதி மக்களின் பிரச்சினையை கண்டுகொள்ள மாட்டார் .அவரை தொகுதி மக்கள் எளிதில் நேரில் சந்திக்க முடியாது.

இரண்டு முறை வெற்றி பெற்று இந்த தொகுதி மக்களுக்கு என்ன செய்தார். கேட்டால் நான் எதிர்க் கட்சி எம்எல்ஏ ஆளுங்கட்சி நிதி ஒதுக்கவில்லை என எளிதாக கூறி விடுவார்.
தற்போதும் அதிமுக தான் ஆட்சி அமைக்க உள்ளது. இப்போதும் இவர் வெற்றி பெற்றால் எதிர்கட்சி எம்எல்ஏ தான்.

எனவே ஆளுங்கட்சி எம்எல்ஏவால் தான் பொதுமக்களுக்கு அனைத்து நலத் திட்டங்களையும் அடிப்படை வசதிகளையும் செய்து தர முடியும்.

தற்போது பத்மநாதன் மேற்குத் தொகுதி மக்களுக்காக அறிவித்துள்ள வாக்குறுதிகளில் சில….

*ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக கோரிக்கையாக உள்ளது உடனடியாக நிறைவேற்றப்படும்,

*சாலை வசதிகள்,

*பாதாள சாக்கடை பிரச்சினை,

*குடிநீர் பிரச்சனை,

*அனைத்து இடங்களிலும் தெருவிளக்குகள்

*சுகாதார வசதிகள், அடிப்படைத் தேவைகள்

*மாதம் ஒரு வார்டில் குறை தீர்க்கும் கூட்டம் எம்.எல்.ஏ வே (நானே) நேரில் நின்று பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைப்பேன்.

*தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு தாமதமின்றி கிடைக்க பாடுபடுவேன்.

இப்படி மக்களுக்காகவே உழைக்க காத்திருக்கும் எங்கள் வேட்பாளர் பத்மநாதன்.

எனவே நாங்கள் அனைவரும் என்றும் அவருடன் தான் இருப்போம் அதிமுகவுக்காக உழைப்போம் மேற்குத் தொகுதியில் பத்மநாதன் கண்டிப்பாக வெற்றி பெற வைப்போம் என உணர்ச்சி பொங்க கூறினார்..

தற்போது மேற்கு தொகுதியில் பொதுமக்களிடம் :

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என அம்மா கூறியது போல் உங்களால் தான் நான் உங்களுக்காகவே நான் உழைப்பேன் என உறுதி கூறுகிறேன் என அனைவரிடமும் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு பெரியோர்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்து வருகிறார் பத்மநாதன்.

எனவே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது மேற்கு தொகுதியில் உள்ள பொதுமக்களின் கருத்தாகும்.

தொகுதியில் தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை:
ஆண்கள்- 1,29,407, பெண்கள்- 1,38,954, மூன்றாம் பாலினத்தவர்- 18, மொத்தம்- 2,68,379.

Leave A Reply

Your email address will not be published.