Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன்

https://trichyxpress.com/
0

இன்றைய ராசிப்பலன் – 01.02.2021

https://trichyxpress.com/

மேஷம்
உங்களின் ராசிக்கு உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக அமையும். சுபகாரியம் கைகூடும். பழைய கடன்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். எதிலும் பொறுமையுடன் இருப்பது வேண்டும். மற்றவர்கள்ஙெ விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கிய பாதிப்புகள் ஓரளவு குறையும்.

மிதுனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வாகனங்களால் வீண் செலவுகள் இருக்கும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். லாபம் பெருகும்.

கடகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் இருக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கூடுவார்கள். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். கொடுத்த கடன்கள் வசூல் ஆகும். பயணங்களால்ஙெ அனுகூலம் கிடைக்கும்.

சிம்மம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை கொடுக்கும். பொன் பொருள் சேரும்.

https://trichyxpress.com/

கன்னி
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக அமையும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த மன ஸ்தாபங்கள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். சேமிப்பு கூடும்.

துலாம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சிறு மனசங்கடங்கள் இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறு இழப்புகள் இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப உயர்வு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும்.

விருச்சிகம்
உங்களின் ராசிக்கு நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் அமையும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் தீரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

தனுசு
உங்களின் ராசிக்கு உங்களுக்கு திடீர் பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருக்கக்கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்கள் மூலம் நற்பலன்கள் கிட்டும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழக் கூடும் .

மகரம்
உங்களின் ராசிக்கு நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்களால் மனசங்கடங்கள் உண்டாகும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன்கள் குறையும். தெய்வ வழிபாட்டின் மூலம் நன்மை பெறலாம்.

கும்பம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.

மீனம்
உங்களின் ராசிக்கு நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.