Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனையில் யோகா, சித்த விழிப்புணர்வு கண்காட்சி. மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

0

உங்களைத் தேடி தமிழ் மருத்துவம் என்ற சிறப்பு முகாம் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ பிரிவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து சித்த மருத்துவத்துறை டாக்டர் காமராஜ், மருத்துவமனை முதல்வர் டீன் வனிதா, இருக்கை அதிகாரி, யோகர டாக்டர், பிரித்தி விஷ்கரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து சித்த மருத்துவத்துறையில் உள்ள அலுவலக கட்டிட வளாகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சித்தமருத்துவ பொருள்களான மூலிகைகள் உள்ளிட்ட பல பொருள்களை வைத்து அதனுடைய நன்மைகளை விளக்கும் வகையில் சொற்பொழிவுகள் நிறைந்த வாசகமும் வைக்கப்பட்டிருந்தது. அதிலும் யோகா குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் பார்த்த வண்ணமாக சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.காமராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது ;-

இயற்கை முறையில் யோகா மற்றும் உணவுப் பொருட்களின் கண்காட்சி திருச்சி மாவட்ட சித்த மருத்துவ துறை அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சிவராசு மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.இந்த முகாம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் அதைத் தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த முகாமின் நோக்கம் பொதுமக்கள் மத்தியில் முறையில் எவ்வாறு செய்வது எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த இயற்கையான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்பதை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் ஆரம்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து புராண காலத்தில் சித்த மருத்துவம் முக்கிய பங்காற்றியது என்பது பொது மக்கள் மத்தியில் அனைவருக்கும் தெரியும். மேலும் அதில் இருந்து பொதுமக்கள் சித்த மருத்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள் .

அதைத்தொடர்ந்து கபசுரக் குடிநீர் நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட பொருட்கள் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அனைத்தும் சேர்த்து ரூபாய் 3 கோடிக்கு கபசுரக் குடிநீர் அனைத்து பொருட்களும் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.

ஆகவே சித்த மருத்துவம் பொதுமக்கள் மத்தியில் தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.