Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி – திருவனந்தபுரம் தினசரி ரயில் ரத்து என அறிவிப்பு

0

திருச்சி – திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் தினசரி ரெயில், இன்று தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி – தாழையூத்து மற்றும் கடம்பூர் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

எனவே, திருச்சி-திருவனந்தபுரம் தினசரி ரெயில் (எண். 02627) மற்றும் திருவனந்தபுரம் – திருச்சி ரெயில் (02628) இன்று (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

முன்பதிவு செய்த பயணிகள் பணத்தை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.