இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டியின் திருச்சி மாவட்டக்கிளையின் பொதுக் குழு கூட்டம், அதன் தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர் ராஜாமுகமது கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவிட் -19 கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கல்பட்டது. மேலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக ரெட் கிராஸ் சேவை ஆற்றிய உறுப்பினர்களை கௌரவித்தல், மற்றும் புதிய மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தேர்வும் நடைபெற்றது.
விழாவில் சேவை கோவிந்தராஜ், செமயா ராஜரெத்தினம், வெற்றிவேல்,
செயலாளர் ஜவஹர் ஹசன், பொருளாளர் செந்தில்குமார், இணைச்செயலாளர்கள் எட்மன்ட் வில்லியம், மோகன்,
இளங்கோவன்,செல்வராஜ், எழில் ஏழுமலை, பரணிகுமார், ஜலாலுதீன், பனான லீப் மனோகர் உட்பட பலர் பங்கேற்றார்கள்.