மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்மலை பகுதி பொன்மலை பட்டியில் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை
அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், தண்டபாணி,
நிர்வாகிகள் பாஸ்கர், சுரேஷ்குமார், நாகராஜ், தேசிங்கு ராஜன், சபாபதி, முத்துக்குமார், ராஜேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருச்சி அதிமுக தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட லால்குடி பகுதியில் ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் நடேசன், வழக்கறிஞர் அசோகன் முன்னிலையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு 73 கிலோ பிரமாண்ட கேகினை வெட்டி பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வழங்கினார்.