அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் இன்று 10 இடங்களில் கணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அமமுக செயற்குழு மற்றும் பொதுக் குழுவில், கட்சியின் பொதுச் செயலாளர்
டிடிவி தினகரனை தமிழக முதலமைச்சராக்க அயராது பாடுபடுவோம்,
அதிமுகவை மீட்டெடுக்கவும் அயராது உழைக்க வேண்டும் என செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதரக் கட்சிகளுடனான கூட்டணி குறித்து முடிவு செய்ய தினகரனுக்கு முழு அதிகாரம் உண்டு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.