Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 20.02.2021

0

இன்றைய ராசிப்பலன் – 20.02.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம்.

குடும்பத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் கிட்டும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பெற்றோருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.

கடகம்

உங்களின் ராசிக்கு வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி சேமிப்பு உயரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் அதகரிக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் கூட்டாளிகளால் மனசங்கடங்கள் உண்டாகலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வெற்றி தரும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.

மகரம்

உங்களின் ராசிக்கு கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகள் அதிகரிக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.