31.01.2021 அன்று புதிதாகத் துவங்கப்பட்ட அனைத்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
இறையன்பு, நேர்மையான வாழ்வு, வளமான நாடு என்னும் கோட்பாட்டுடன் துவங்கப்பட்டுள்ள இந்தக் கட்சி ஊழல், வன்முறைகள், சாதியத் தீண்டாமைகளற்ற தமிழகத்தை நிர்மானிக்க வேண்டும் என்னும் கனவுடன் துவங்கப்பட்டுள்ளது.
நாட்டின் நன்மைக்கும், வளத்திற்கும், நீர் மேலாண்மை, விவசாயிகளின் நலன்,
சிறு குறு வியாபரிகளுக்கான பாதுகாப்பு,
இந்தியாவின் மதச்சார்பற்ற பண்முகத்தன்மைக்குரிய பாதுகாப்பு,
அந்தந்த மக்களின் மத வழிபாட்டு உரிமைகளுக்கு முழுச் சுதந்திரம், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து கிறிஸ்தவ இஸ்லாம் மதங்களுக்கு மாறிய மக்களுக்கு அவர்களின் பிறப்பின் அடிப்படையிலான வாழ்வாதார உரிமைகளைப் பெற்றுத்தருவது,
தமிழக உரிமை மற்றும் கிராமப்புற மாணவச் செல்வங்களுக்கு எதிரிடையான சட்டங்களை எதிர்ப்பது போன்ற அடிப்படைச் சமூக நலன்களை முன்னிறுத்தி கட்சி செயல்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் பேராயர் ஆர். தனராஜ் தெரிவித்தார்.
உடன் கட்சியின் தலைவர் சி. ஆரோக்கியதாஸ் துணைத்தலைவர் ஆர். ஜெயபாலன், பொருளாளர் வழக்கறிஞர் தாஸ்பிரகாஷ், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிராங்க்ளின் சீசர் தாமஸ் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தேவகுமார், ஏசுதாஸ் வின்சென்ட், ஜான்சன்துரை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்