Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளைய ரத சப்தமி சூரியனை இப்படி வழிப்பட்டால் நல்லது நடக்கும்

0

மகாபாரதத்தில் பீஷ்மருக்காக அப்போது பூமியில் வாழ்ந்த அனைத்து மக்களும் செய்த செயல்பாட்டை நாம் தொடர்கிறோம் என்ற எண்ணமே நம்மை பரவசமடையச் செய்யும். ரத சப்தமி நாளில் காலையில் ஸ்நானம் செய்வதற்கு முன் ஏழு எருக்க இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்மூன்று இலைகளைத் தலையிலும் இரண்டு இரண்டு இலைகளைத் தோள்களிலும் வைத்து ஸ்லோகங்களைச் சொல்லி நாம் செய்த பாவங்கள் எல்லாம் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிய பின்னர் ஸ்நானம் செய்யலாம்.

இதில் ஆண்கள் எருக்கன் இலைகளில் கொஞ்சம் விபூதியையும் பெண்கள் கொஞ்சம் மஞ்சள் பொடி அல்லது அட்சதை இட்டு நீராடுவது மிகவும் சிறப்பு. இவ்வாறு நீராடினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
அதே போல் ரதசப்தமி நாளில் பூஜை அறையில் சூரிய ரதக் கோலம் இடலாம். ரதக் கோலம் இடத் தெரியாதவர்கள் சாதாரணமாக வட்டங்களாக சூரிய சந்திரர்களை வரைந்துகொள்ளலாம். சூரிய பகவானை நீராடியதும் தரிசனம் செய்து சர்க்கரைப்பொங்கலை நிவேதனமாக வைத்து வழிபாடு செய்யலாம். மேலும் வீடுகளில் ஆதித்ய ஹிருதயம் ஒலிக்கச் செய்து கேட்கலாம்.

ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மாஸ்டமி. இந்த நாளில் தான் பீஷ்மர் முக்தி அடைந்தார். எனவே இந்த நாளில் நீர் நிலைகளுக்குச் சென்று புனித நீராடி பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கலாம். அப்போது பீஷ்மருக்காகவும் வேண்டிக்கொள்வது மிகவும் விசேஷம் .

அறிவியல் ரீதியாக கணக்கிட்டால் வர இருக்கும் காலம் கடும் கோடை காலம். எருக்கம் இலைகளை வைத்து நீராடும் போது கோடைக்காலத்தில் வரும் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வராமல் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.சூரியன் ஆத்மகாரகன் என்பதால் சூரியபகவானை நினைத்துச் செய்யும் இந்த வேண்டுதல் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் சுத்தம் செய்து முன்வினைப்பாவங்களை நீக்குகிறது.

புனித நீராட உகந்த நேரம்

புனித நீராட பிப்ரவரி 19 அதிகாலை 5.15 மணி முதல் காலை 6.50மணி வரை

நீராடும்போடு சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம்ஹர ஸப்தமி
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி
தேவி, த்வாம் ஸப்த லோகைக மாதரம்
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய!
என துதியை மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே நீராடுதல் வளம் தரும்.

Leave A Reply

Your email address will not be published.