திமுகவின் 11வது மாநில மாநாடு திருச்சியில் மார்ச் 14 அன்று நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
தேர்தலில் வெற்றிக்கோட்டையைக் கைப்பற்றுவதற்கான வியூகங்கள் திருச்சி மாநில மாநாட்டில் தீட்டப்படும் என்றும், திருச்சி என்றாலே திருப்புமுனைதான் என்றும்,
இம்மாநாடு திமுகவிற்கும்- மாநிலத்திற்கும் திருப்புமுனையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூரில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முதன்மை செயலாளர் கே.என்.நேருவும், ஐபேக் குழுவும் இந்த மாநாட்டிற்காக ஏற்பாடுகளை கவனிக்கின்றனர்.
மாநாட்டில் மொத்தம் 10 முதல் 12 லட்சம் மக்கள் வரை திரள வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
அதனால்தான், 300 முதல் 500 மொபைல் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
15 லட்சம் பேருக்குத் தேவையான குடிநீர் கணக்கிடப்பட்டு ஆங்காங்கே போர் போட்டாகிவிட்டது.
மாநாட்டுத் திடலுக்குள் நியாய விலை உணவகங்கள் 500 திறப்பதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன எனவும் கூறப்படுகிறது.