திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.43 கோடி மதிப்புள்ள
கடத்தல் தங்கம் பறிமுதல்
3 பேரிடம் தொடர் விசாரணை.
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 7.10 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரைக்காலை சேர்ந்த மாலினி (வயது 38) 1 கிலோ 100 கிராம் தங்கத்தையும்,

ராமநாதபுரத்தை சேர்ந்த கலீல் ரகுமான்(வயது42) 850 கிராம் தங்கத்தையும், ரகுமான்(வயது 38) 980 கிராம் தங்கத்தையும் பசைவடிவில் கடத்தி வந்தது தெரியவந்தது
. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2 கிலோ 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 3 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 43 லட்சம் ஆகும்..