திருச்சியில் தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல்வாழ்வு நல சங்க கூட்டமைப்பு சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு சங்கத்தின் நிறுவனர் தலைவர் கமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன..
விற்பனைப் பிரதிநிதிகளுக்கு என்று தனி நல வாரியம்,
பணி நேரத்தை 8 மணி நேரமாக ஆக்கவேண்டும்,
பிரதிநிதிகளுக்கு பணி நிரந்தரம் மற்றும் பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,
குறைந்தபட்ச ஊதியம் நினைக்க அனைத்து நிறுவனங்களுக்கும் வலியுறுத்துவது,
நிறுவனங்களே மருத்துவ காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு செய்து கொடுக்க வேண்டும்,
பணியின் போது மரணம் அடைந்தாலும் உடல் ஊனம் அடைந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய இழப்பீடு கண்டிப்பாக அளிக்க வேண்டும்,
ஒரு நிறுவனத்தில் 7 பேர் மேல் விற்பனை பிரதிநிதிகள் பணிபுரிந்தால் கண்டிப்பாக PE – ESI பிடிக்க வேண்டும் ,
ஐந்தாண்டுகளுக்கு மேல் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தால் அவருக்கு அனைத்து விதமான பணபலன்கள் மற்றும் கிராஜுவிட்டி கொடுக்க வேண்டும்,
தொடர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்து பணியில் இருந்து விலகினாலும் அல்லது விளக்க பட்டாலும் அவருக்கு ஆயுட்காலம் முழுவதும் பென்சன் வழங்க வேண்டும்,
ஆண்டுக்கு ஒருமுறை போனஸ் வழங்க வேண்டும் ஆகிய 10 கோரிக்கைகள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தலைவர் கமல்ராஜ்,பொது செயலாளர் தவசி மணி , பொருளாளர் மணிவண்ணன் மற்றும் ஏராளமான விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.