திருச்சியில் இலவச பல் மருத்துவப் பரிசோதனை முகாம்!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வினைசெய் அறக்கட்டளை சுபன் பல் மருத்துவமனையுடன் இணைந்து
திருச்சிராப்பள்ளி கோ அபிஷேகபுரம் புத்தூர் பகுதியில் இலவச பல் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.
வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் முகாமை தொடங்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி கோல்டன் பஜார் அரிமா சங்க தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.ருத்ர சாந்தி யோகாலயம் யோகரத்னா கிருஷ்ணகுமார்,மக்கள் சக்தி இயக்கம் செல்லப்பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முகாமில் சுபன் பல் மருத்துவமனை பல் மருத்துவர்கள் நித்யா, கோகிலா ஆகியோர் கலந்துகொண்டு பல் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதில், பங்கேற்றரவர்களுக்கு பல் சொத்தை, பல் மஞ்சள் கறை, வாய்நாற்றம் ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
பிரஷ் பயன்படுத்தி பல் துலக்குவது, காலை ஒருமுறை மட்டுமல்லாமல் இரவு உணவுக்குப் பின்னும் பல் துலக்குவது உள்ளிட்ட சுகாதார அறிவுரைகள் வழங்கப்பட்டன. பல், வாய் தொடர்பான குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
முன்னதாக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் வரவேற்க, நிறைவாக வினைசெய் அறக்கட்டளை கார்த்திக் நன்றி கூறினார்.