மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாவட்ட பொருளாளராக வழக்கறிஞர் கிஷோர்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் கிஷோர் குமார் கூறுகையில்:
மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைபாளராக பொறுப்பை தொடர்ந்து_ என்னை திருச்சி கிழக்கு-மேற்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மத்திய மாவட்ட கட்டமைப்பின் “மாவட்ட பொருளாளராக” பொறுப்பு கொடுத்து பணிசெய்ய வாய்ப்பளித்த நம்மவர் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களுக்கும்

கட்டமைப்பு பொதுச்செயலாளர் M.முருகானந்தம் அர்களுக்கும்,
மாநில பொருளாளர் சந்திரசேகர் அவர்களுக்கும்
மய்ய தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் தெரிவித்தார்.