மாநாடு தேதியை நாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் விவசாய கடன் தள்ளுபடி 90 சதவீத அதிமுகவினரே பயனடைந்துள்ளனர். திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு பேட்டி.
திமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.என். நேரு தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மூன்று சக்கர சைக்கிள்கள் மடக்கு சக்கர நாற்காலிகள் மூன்று கோல்கள் முடநீக்கியல் சாதம் போன்றவை வழங்கும் நிகழ்வு திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் நல உதவிகளை வழங்கிய பின் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது
திருச்சி திமுக மாநாடு தேதியினை நாளை அல்லது மறுநாள் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிப்பார் என கருதுகிறேன்.
மாநாடு நடத்துவது தொடர்பாக ஐபேட் மற்றும் எங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. திமுக தேர்தலில் ஜெயிப்பதற்காக ஆலோசனைகள் வழங்க வந்திருக்கிறது அவர்கள் சில திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் தலைவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலும் திருச்சி திமுக மாநாடு திறந்தவெளி மாநாடாக தான் இருக்கும்.
எங்களைப் பொறுத்தமட்டில் மாநாடு மைதானம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதி போன்றவற்றை ஏற்படுத்த சொல்லியிருக்கிறார்கள் அந்த பணிகள் நடந்து வருகின்றன.
விவசாயிகள் கடன் தள்ளுபடி திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை காரணம் இந்த 10 ஆண்டுகளில் 90 சதவீத கடன்களும் அதிமுகவினருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது அவர்கள்தான் இதில் லாபம் பார்த்திருக்கிறார்கள்.
விவசாயிகள் லாபம் அடைய வில்லை நாங்கள் கேட்டால் கடனும் தரவில்லை ஆகவே பயனடைந்த அதிமுகவினர் தான் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் எங்களுக்கு வழக்கம்போல் விவசாயிகள் வாக்களிப்பார்கள் எடப்பாடி பழனிசாமி எப்படி கூட்டம் கூட்டுகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும் உண்மையில் ஜனங்க கிட்ட அவர்கள் போய் வாக்கு கேட்க முடியாது.
அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என சசிகலாவுக்கு பழனிசாமி சொல்கிறார் ஆனால் திமுக தான் எதிரி என டிடிவி தினகரன் சொல்லிக்கொண்டிருக்கிறார் உண்மையில் அவர் அவர்களைத்தான் எதிர்க்க வேண்டும் ஆனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரது சொத்துக்களை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.
நான் திமுக தலைவர் கருணாநிதியுடன் 30 ஆண்டுகாலம் பயணித்திருக்கிறேன், இதுவரை திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளை நாங்கள் ஆக வேண்டாம் என்று சொல்லியதில்லை எங்களைப் பிடிக்காமல் அவர்கள் வேண்டுமானால் சென்றிருக்கலாம்.
திமுக அதிமுக தவிர்த்து கூட்டணி அமைப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார் .
ஆகவே அவருடன் கூட்டணி இருக்குமா என்பதை சொல்ல இயலாது.
பாரிவேந்தர் தனித்துப் போட்டி என்று சொல்லி இருப்பதாக கூறுகிறீர்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்று பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் அவரது பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை தனித்துப் போட்டி என்று சொல்லி இருக்கிறாரா என்று பார்ப்போம் இவ்வாறு அவர் கூறினார்.